×

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.48 லட்சம்

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.48 லட்சம் காணிக்கை வசூலாகி இருந்து. சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு மாதந்தோறும் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கோசாலை உண்டியல் மற்றும் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர், நேர்முக உதவியாளர், உதவி ஆணையர் யக்ஞநாரயணன், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்ட இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் கணக்கிடப்பட்டன.அதில் ரூ.48 லட்சத்து 27 ஆயிரத்து 64 ரொக்கமும், 180 கிராம் தங்கமும், 464 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது. இந்த பணியில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

The post இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.48 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Itankudi Mariamman ,Chatur ,Idankudi Mariyamman temple ,Itankudi ,Mariamman ,temple ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்