×

தலைக்காட்டுபுரத்தில் அரசு பள்ளி கட்டிடப் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு

 

விளாத்திகுளம், ஜூன் 29: தலைக்காட்டுபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடப் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளாத்திகுளம் யூனியன், தலைக்காட்டுபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று குழந்தைகள் நேய பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் ரூ.28.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ நோில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார். அப்போது திமுக விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தலைக்காட்டுபுரத்தில் அரசு பள்ளி கட்டிடப் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Markandeyan MLA ,Thalikattupuram ,Vlathikulam ,Thalikattupuram Panchayat Union Primary School ,
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...