சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் வடக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மணியன் யோகராஜ்(24). இவர், அங்குள்ள தனியார் பிஎட் கல்லூரியில் படித்து வருகிறார். தனது டூவீலரில் இவர் அரிவாளுடன் ஊனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுற்றி வருவது போலவும், பள்ளி கொடிக்கம்பத்தின் முன் அரிவாளுடன் அமர்ந்து போஸ் கொடுப்பது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பெற்றோர், ஆசிரியர் சங்கம் சார்பிலும், தலைமை ஆசிரியர் சார்பிலும் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், தலைவாசல் போலீசார் யோகராஜிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை ேபாலீசார் ஆய்வு செய்தனர். அந்த காட்சி 2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. சினிமாவில் நடிக்கும் ஆசையில் இதுபோன்ற போஸ்கள் கொடுத்து படம் எடுத்ததாகவும், அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதில், தற்போது வெளியே கசிந்து விட்டதாகவும் யோகராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியராக படித்து கொண்டிருக்கும் யோகராஜ் வரும் காலத்தில் பல மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளார். ஆனால் அவருகே போலீசார் காவல்நிலையத்தில் பாடம் நடத்தும் சூழலை ஏற்படுத்திவிட்டார்.
The post சினிமா மோகத்தால் வந்த வினை பாடம் எடுக்க உள்ள ஆசிரியருக்கு பாடம் எடுத்த போலீஸ் appeared first on Dinakaran.