×

மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு திட்டக்குழு உறுதுணையாக இருக்க வேண்டும் அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு

மதுரை: மதுரை மாவட்ட திட்டக்குழு மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, நேற்றைய அதன் முதல் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். மதுரை மாவட்ட திட்டக்குழு முதல் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி தலைமை வகித்தார். இந்த கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், எம்எல்ஏ வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், உறுப்பினர்கள் நேருபாண்டி, வடிவேல்முருகன், முத்துராமன், கதிரவன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார், முருகேஸ்வரி சரவணன், யூனியன் சேர்மன் வீரராகவன் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள நகராட்சி,

பேரூராட்சி, யூனியன் சேர்மன்கள், திட்ட குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ‘‘மாவட்ட வளர்ச்சிக்கு திட்டக்குழு உறுப்பினர்களின் பங்கு மிகவும் முக்கியம். மாவட்டம் வளர்ச்சி பெற நல்ல திட்டங்களுக்கு தேவையானவற்றை பரிந்துரை செய்து, அதனை நிறைவேற்ற அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். திட்டக்குழு மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடும் என்ற நம்பிக்கையில் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்’’ என்றார். இத்திட்டக்குழுவின் செயல்பாடுகள்: முன்னோடி வங்கியால் ஆண்டுதோறும் வகுக்கப்படும் ஆண்டு கடன் திட்டத்தினை கருத்தாய்வு செய்து மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

The post மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு திட்டக்குழு உறுதுணையாக இருக்க வேண்டும் அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : SPC ,Minister ,B. Moothie ,Madurai ,Madurai District SPC ,B. Moorthi ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...