×

150 பள்ளிவாசல்களில் இன்று பக்ரீத் தொழுகை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) 150 பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடைபெற உள்ளது. பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாசல்கள், ஈத்கா மைதானங்களில் இன்று (29ம் தேதி) சிறப்பு தொழுகைகள் நடைபெற உள்ளது. ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் தொழுகை நடத்துவதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட உள்ளனர்.

ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பள்ளிவாசல், ரயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பாளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பாளையம், எல்லப்பாளையம், கொக்கராயன்பேட்டை, கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பூம்புகார்தோட்டம் மற்றும் கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம் உள்பட மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் காலை 6.25 முதல் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. மேலும் ஈகை திருநாளையொட்டி குர்பானி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி ஹிபாயத்துல்லா தெரிவித்துள்ளார்.

The post 150 பள்ளிவாசல்களில் இன்று பக்ரீத் தொழுகை appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Erode ,Erode district ,Bakrit festival ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...