×

கூத்தாநல்லூரில் வளர்ச்சி பணி

மன்னார்குடி: கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர் ச்சி திட்டப் பணிகளை நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா முன்னிலை யில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரத்தில் தமிழக முதல்வரின் விரிவு படுத்தப்பட்ட காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு ரூ 26.80 லட்சம் மதி ப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா முன்னிலையில் நகராட்சி நிர்வாக மண்டல இயக் குனர் சரஸ்வதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 21.43 கோடி மதிப்பில் இரண்டு இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் 77 கிமீ தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அய்யன் தோட்டச்சேரியில் ரூ 19.28 லட்சம், வள்ளுவர் காலனியில் ரூ 24. 96 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிட கட்டுமான பணிகள் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 99 லட்சம் மதிப் பில் அல்லிக்கேணி குளம், தோட்டச்சேரியில் ரூ 60.50 லட்சம் மதிப்பில், நாக ங்குடியில் ரூ 21 லட்சம் மதிப்பில் குளங்கள் மேம்படுத்தும் பணிகளை நகரா ட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, குணுக்கடி பகுதியில் இயங்கி வரும் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சிருஷ்டி நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 23. 95 லட்சம் மதிப்பில் கட் டப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா, நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா , நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கூத்தாநல்லூரில் வளர்ச்சி பணி appeared first on Dinakaran.

Tags : Koothanallur ,Mannargudi ,City ,president ,Fatima Basheera ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை