×

கரூர் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது இலவச விடுதி வசதி உண்டு

கரூர்: கரூர் அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கம் கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில முழு நேர வகுப்பாக இசைக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முறையான பயிற்சிக்கு பின் அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தற்போது 2023-24ம் கல்வி ஆண்டிற்காக மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாதசுரம் துறைக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதில் சேரலாம். மாணவர்கள் பெருமளவில் சேர்ந்து பயன்பெற குறைவான பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 350 மட்டும் பெறப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவசமாக தங்கும் விடுதி வசதி மற்றும் இசைப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்குகிறது. தமிழக அரசால், இசைக்கலை வளர இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ. 400 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, அரசுத்துறை மற்றும் ஆலயங்களில் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலை ஆர்வமும், திறமையும் உள்ள மாணவ, மாணவிகள் இதில் சேரலாம். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் கரூர் ஜவஹர் பஜாரில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், 9500277994 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது இலவச விடுதி வசதி உண்டு appeared first on Dinakaran.

Tags : Karur Government Music School ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு