×

சில்லி பாயின்ட்…

* ஆலூரில் நேற்று தொடங்கிய துலீப் டிராபி காலிறுதியில், கிழக்கு மண்டலத்துடன் மோதும் மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 182 ரன்னுக்கு சுருண்டது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 38 ரன், ஹிமான்ஷு 29, உபேந்திரா 25, விவேக் சிங் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். கிழக்கு மண்டல பந்துவீச்சில் மணிசங்கர் முரசிங் 5 விக்கெட் கைப்பற்றினார். முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டலம் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்துள்ளது.

* பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் துலீப் டிராபி காலிறுதியில், வடகிழக்கு மண்டல அணிக்கு எதிராக களமிறங்கி உள்ள வடக்கு மண்டலம் முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்துள்ளது. தொடக்க வீரர் துருவ் ஷோரி 135, பிரஷாந்த் 32, பிரப்சிம்ரன் 31 ரன் எடுத்தனர். நிஷாந்த் 76, புல்கிட் நரங் 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* 2011 ஐசிசி உலக கோப்பையை இந்திய அணி வென்றபோது, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை இளம் வீரர் விராத் கோஹ்லி தனது தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்தார். கேப்டன் தோனி உள்பட மூத்த வீரர்கள் யாரும் எடை அதிகம் கொண்ட சச்சினை தூக்கி சுமக்கும் அளவுக்கு உடல்தகுதியுடன் இல்லை என்பதால் தான், கோஹ்லிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Duleep Trophy ,-final ,Alur ,Central Zone ,East Zone ,Dinakaran ,
× RELATED முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம்...