×

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் கருவறை பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் கருவறை பூட்டை உடைத்து அம்மன் தாலியை ஒரு தம்பதி திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிஸ்தலத்தில் உச்சிமாகாளியம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 2 கால் பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது. சிசிடிவியை சோதனை செய்த பொழுது காரில் குழந்தையுடன் வந்த தம்பதி சுமைகும்பிடுவது போல சென்று தாலியை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபிஸ்தலம் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 இடங்களில் திருட்டு நடந்திருப்பதால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் கருவறை பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Amman Thali ,Babanasam, Thanjavur district ,Thanjavur ,Amman Thalai ,Babanasam ,Thanjavur district ,
× RELATED மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்