×

சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். 2019ஆம் ஆண்டு முதல் ரூ.234 கோடி செலவில் 4 வழித்தடங்களை கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. 4 வழிப்பாதையில் ஒருவழிப்பாதையான வண்டலூர்-தாம்பரம் மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் பல இன்னல்களை சந்தித்தனர். இதனால், கடந்த 2019 ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியானது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஒருவழி பாதையாக வண்டலூரிலிருந்து தாம்பரம் வரக்கூடிய மேம்பாலபாதை மட்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது பாதையான பெருங்களத்தூரிலிருந்து, சீனிவாசராகவ நகர் பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பால பணியானது கடந்த மாதம் முடிக்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. இதன் காரணமாக மேம்பாலத்தை விரைவில் திறக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலத்தை சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.

The post சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Tha.Mo.Anparasan ,Chennai Perungalathur ,Birkankaranai ,Chennai ,Minister Thamo Anparasan ,Perungalathur ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...