×

சேமியா கேசரி

தேவையானவை:

சேமியா – 1 கப்,
சர்க்கரை – ஒன்றரை கப்,
நெய் – கால் கப்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
ஆரஞ்சு ரெட் கலர் – ஒரு சிட்டிகை,
முந்திரிப்பருப்பு – 10,
திராட்சை – 10,
ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

எண்ணெய், நெய்யில் பாதி, பாதி எடுத்து, இரண்டையும் காய வைத்து, முந்திரி, திராட்சை சேர்த்து1 நிமிடம் வறுத்தெடுங்கள். பின்னர் சேமியாவை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைகப் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து, நன்கு வேக விட்டு தீயை குறைத்து,மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடுங்கள். மூடியை திறந்து சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும்கெட்டியாகும் வரை கிளறி, கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

 

The post சேமியா கேசரி appeared first on Dinakaran.

Tags : Samiya Kesari ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்