×

சேமியா பக்கோடா

தேவையானவை:

சேமியா – அரை கப்,
கடலைமாவு – 1 கப்,
பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 5,
சோம்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் -தேவைக்கு.

செய்முறை:

2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். ஆறியவுடன் அதில்கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சோம்பு, உப்புசேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறுங்கள். எண்ணெயைக் காய வையுங்கள். ஒரு கரண்டிசூடான எண்ணெயை சேமியா கலவையில் சேர்த்து பிசைந்து, சிறு சிறு பக்கோடாக்களாக கிள்ளி எண்ணெயில்போட்டு பொரித்தெடுங்கள்.

 

The post சேமியா பக்கோடா appeared first on Dinakaran.

Tags : Samiya Pakoda ,
× RELATED சோளம் தினை பரோட்டா