×

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் கூடுதல் விலைக்கு மாடுகள் விற்பனை

*அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு போனது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று, மாடு வரத்து அதிகமாக இருந்ததுடன், நாளை 29ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், கூடுதல் விலைக்கு போனது. இதில், அதிகபட்சமாக ரூ.65ஆயிரம் வரை விற்பனையாதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் மாட்டு சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, ஆந்திரா மாநிலத்திலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அதனை வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.

இதில், நாளை 29ம் தேதி பக்ரீத் பண்டிகை என்றாலும், சுமார் மூன்று வாரத்திற்கு முன்பே மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், அதனை வாங்க வந்த வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமானது. இதனால், அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு வழக்கத்தைவிட சற்று அதிகமாக விற்பனையானது. அதிலும் கடந்த வாரம் கேரள வியாபாரிகள் வருகை அதிகமானதால், ஒரே நாளில் சுமார் 3 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போதும், மாடுகள் வரத்து அதிகமானது. சுமார் 3200க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டன. இதனை வாங்க கேரள மாநில பகுதி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகளவு வந்திருந்ததால், மாடுவிற்பனை மேலும் விறுவிறுப்பானது.

இதில், நாட்டு காளை மாடு ரூ.40ஆயிரம் வரையிலும், ஆந்திரா காளை மாடு ரூ.50ஆயிரம் வரையிலும், அதிக எடைகொண்ட எருமை மாடு ரூ.65 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.38 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும் என எந்த வாரத்திலும் இல்லாத வகையில், அதிகபட்ச விலையில் விற்பனையானதாகவும், நேற்று ஒரே நாளில் ரூ.3.50கோடி வரை வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் கூடுதல் விலைக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pollachi market ,Bakrit festival ,Pollachi ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...