×

சிறந்த சமூக சேவகர் “ பாலம்” பா.கலியாணசுந்தரம்க்கு அரசு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறந்த சமூக சேவகரான “பாலம்” பா.கலியாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையை பாராட்டி, கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒன்றினை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வழங்கினார்.

“பாலம்” பா.கலியாணசுந்தரம் கல்லூரியில் நூலகராக பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியம், ஓய்வூதியம், குடும்ப சொத்து மற்றும் விருதுகள் மூலம் கிடைத்த அனைத்தையும் தொண்டு பணிக்கே வழங்கியதோடு, “பாலம்” என்ற அமைப்பினை தொடங்கி நீண்ட காலமாக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும், குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பணியாற்றி, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது மற்றும் அமெரிக்காவின் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” விருது பெற்றுள்ளார்.

சமூக சேவகர் பாலம் பா. கலியாணசுந்தரம் அவர்களின் சேவையை பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப்பகுதியில் குடியிருப்பு ஒன்றினை அவருக்கு ஒதுக்கீடு செய்து, பயனாளி பங்குத் தொகையினையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர்
“பாலம்”பா.கலியாணசுந்தரம் அவர்களிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சிறந்த சமூக சேவகர் “ பாலம்” பா.கலியாணசுந்தரம்க்கு அரசு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Bridge ,Pa ,Kaliyanasuntharam ,Kalianasuntharam ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...