×

ஏழை, எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து

இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை – எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஏழை, எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM G.K. ,Stalin ,Bakreith ,Chief Minister for Islamists ,Md. ,G.K. Stalin ,Bakreet ,CM G.K. Stalin ,
× RELATED 20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை...