×

சிதம்பரம் நடராஜன் கோயில் பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்: தீட்சிதர்களை கைது செய்ய கோரி சிதம்பரம் நகரில் சுவரொட்டி

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் இருவரை கைது செய்ய வலியுறுத்தி நகரின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசன விழா நடைபெற்று வருகிறது. இதனால் கோயில் பரபரப்பாக உள்ள நிலையில் பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தை சேர்ந்த சிவா பக்தர் கார்வண்ணன் என்பவர் கோயிலுக்கு சென்றார். அப்போது கோயிலில் உள்ளே இருந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா புறப்படுவதற்கான நேரம் என்பதால் கார்வண்ணனை ஓரமாக இருக்கும்படி தீட்சிதர்கள் கூறியுள்ளனர். அப்போது தீட்சிதர்களுக்கும், கார்வனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கார்வண்ணனை தீட்சிதர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.

இந்நிலையில், கார்வண்ணன் சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தீட்சிதர்கள் கனக சபாபதி, ஸ்ரீ வர்ஷன் ஆகியோர் இருவர் மீதும் சிதம்பரம் நகர காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கின் கீழ் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது.

அந்த கண்டன போஸ்டரில் தமிழக அரசே சிதம்பரம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த யாதவன் என்ற முதியவரை ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, அடித்து தாக்கிய தீட்சிதர்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும், நடராஜரர் அனைத்து சாதியினருக்கும் சொந்தமானவர் தான், தீட்சிதர்களுக்கு மட்டுமே சொந்தனமானவர் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. யாதவர் இன பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு என்ற பெயரில் இந்த பதாகை ஒட்டப்பட்டுள்ளது. இந்த பதாகையை ஒட்டியது யார் என்பது குறித்து சிதம்பரம் போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிதம்பரம் நடராஜன் கோயில் பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்: தீட்சிதர்களை கைது செய்ய கோரி சிதம்பரம் நகரில் சுவரொட்டி appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajan Temple ,Chidambaram ,Dikshitar ,Dikshitars ,Chidambaram Nataraja Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...