×

15% கூடுதல் தக்காளி கொள்முதல்: அனைத்து காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.. அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..!!

சென்னை: அனைத்து காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை நுகர்வோர் கடையை ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

15% கூடுதல் தக்காளி கொள்முதல்:

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதல்வர் கூறினார். அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. 3 முதல் 4 நாட்களில் தக்காளி விலை முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

அனைத்து காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை:

அனைத்து பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச் சந்தையில் நேற்று ரூ.80-க்கு மேல் விற்கப்பட்ட தக்காளி கூட்டுறவு கடைகளில் ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை உயர்வு நீடித்தால் பண்ணை பசுமை கடைகள் மட்டுமல்லாது நியாய விலை கடைகளிலும் தக்காளி விற்க ஏற்பாடு செய்யப்படும். தேவைகேற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை குறைந்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். தக்காளி விலை படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 35,000 நியாய விலை கடைகளில் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

The post 15% கூடுதல் தக்காளி கொள்முதல்: அனைத்து காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.. அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakarappan ,Chennai ,Tenampet Farm ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்