×

முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு

தேனி: தேனி அருகே, முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தேனி அருகே வடபுதுப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்(60). இவரது மகன் வெங்கடேசன். இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ். விக்னேஷ் மனைவியுடன், வெங்கடேசன் பிரச்னை செய்தது தொடர்பான புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் ஏற்கனவே வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வெங்கடேசனுக்கும், விக்னேசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விக்னேஷ், அவரது உறவினர்கள் வேல்முருகன், லட்சுமணன், விஷ்ணு, வேலு மற்றும் சிலர் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் இல்லாததால், அவரது தந்தை தர்மராஜை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர். இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வேல்முருகன், லட்சுமணன், விஷ்ணு, வேலு மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Vadabudhupatti East ,
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்