×

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி துவக்கி வைத்தார்

காரைக்குடி: காரைக்குடியில் கோவிலூர்நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ், இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்க எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் முத்துத்துரை துவக்கிவைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறையில் மகத்தான சாதனைகளை படைத்துவருகிறார்கள். எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக முதல்வரின் சீரிய சிந்தனையில் உருவானது தான் காலை உணவு திட்டம். இதுதவிர இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பாடத்தில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். போதை பழக்கத்துக்கு யாரையும் அடிமையாக விடாமல் இளைஞர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், கலாகாசிநாதன், தெய்வானைஇளமாறன், சத்யாகார்த்திகேயன், திவ்யாசக்தி, மலர்விழிபழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

The post போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kovilurnachiyappa ,Swami College of Arts and Sciences NSS ,Young Red Cross ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!