×

கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு கட்டி அகற்றம்

கீழக்கரை: கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் குருவம்மாள் (50). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கழுத்தில் இருந்த தைராய்டு கட்டியால் பெரும் அவதி அடைந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரத்குமார், மயக்க மருந்து நிபுணர்கள் ராஜேஸ்வரன், மேகலா மற்றும் தலைமை செவிலியர்கள் ஆனந்தி, சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து தைராய்டு கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

 

The post கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு கட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Geezalkarai Government Hospital ,Geezakarai ,Geezakarai Government Hospital ,Dinakaran ,
× RELATED கீழக்கரை நகர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை