×

சித்தோடு ஆவின் நிறுவனத்தில் ரூ.4.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்

பவானி: சித்தோடு ஆவின் நிறுவனத்தில் ரூ.4.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 50 பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.50 லட்சம் கறவை கடனுதவி, 23 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.20 லட்சத்தில் தலா 2 கிடாரி கன்று வாங்குதல் மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, 182 பால் உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு ரூ.1.49 கோடியில் கறவை மாடுகள் பராமரிக்க கனரா வங்கி சார்பில் பராமரிப்பு கடன் உதவி, 268 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1.34 கோடியில் தலா 1 கறவை மாடு வாங்க வங்கி கடனுதவி வழங்கப்பட்டது. தாளவாடியில் உள்ள 3 சங்கங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பால் பகுப்பாய்வு கருவி, தேசிய பால்வள வாரிய உதவியுடன் 55 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1 லட்சத்தில் மறுதாம்பு வகை சான்றளிக்கப்பட்ட தீவன விதை சோள தொகுப்புகள், 700 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.4.20 லட்சத்தில் தீவன மக்காச்சோளம் விதைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்காக தொடங்கப்பட்டுள்ள பசுவணாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் 5 துருவுறா கேன்கள், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை திட்டத்தின் கீழ் ரூ.1.16 லட்சத்தில் 5 கிராம நிலை ஊழியர்களுக்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நைட்ரஜன் குடுவைகள், பால் உற்பத்தியாளர்களின் 42 கால்நடைகளுக்கு ரூ.14.70 லட்சம் இழப்பீட்டு தொகை, பேரறிஞர் அண்ணா நலநிதி திட்டத்தில் ரூ.11 லட்சத்தில் பால் உற்பத்தியாளர் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை மற்றும் ரூ.36.12 லட்சம் செலவில் 7 தற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை என ரூ.4.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் உள்ள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சித்தோடு ஆவின் நிறுவனத்தில் ரூ.4.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Dairy Minister ,Chithod Aavin ,Bhavani ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED பவானி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி