×

திருவையாறு அருகே மதுபான கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

திருவையாறு: திருவையாறு அடுத்த அளிசக்குடி கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு மதுபான கடை இயங்கி வருகின்றது. மது அருந்துபவர்கள் தினந்தோறும் சண்டையிட்டுக் கொள்வதனாலும், பெண்கள் நடமாட முடியாத நிலையிலும், ஜாதி பிரச்னை மோதல் இருந்துவந்து கொண்டே உள்ளது. மதுபான கடையின் அருகில் கோயில்கள், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. எனவே மதுபான கடையை மூடசொல்லி கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் கடையை மூடப்படும் என கூறி வந்தனர். ஆனால் மூடவில்லை. இந்நிலையில் நேற்று காலை அளிசக்குடி அரசு மதுபான கடையை திறப்பதற்கு டாஸ்மார்க் பணியாளர்கள் வந்தனர். இதை அறிந்த கிராம பெண்கள் திரண்டனர். நாங்கள் கடையை மூட சொல்லி மனுக்கள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

தமிழக அரசு தமிழகத்தில் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்ததில், எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பணியாளர்கள் கடையை திறக்க வந்திருப்பது எங்கள் இடையே அதிர்ச்சி அளிக்கிறது என ஆத்திரமடைந்த 100க்கு மேற்பட்ட பெண்கள் கடைக்கு முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் அள்ளூர் விஏஓ கர்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவையாறு அருகே மதுபான கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's blockade protest ,Thiruvaiyaru ,Alishakudi village ,Women's blockade ,Dinakaran ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா