×

குண்டு மல்லி விலை உயர்வு

ராயக்கோட்டை, ஜூன் 28: ராயக்கோட்டை பகுதியில் குண்டுமல்லி விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராயக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள காலான்கொட்டாய், பாலினூர்கொட்டாய், குரும்பட்டி, காடுசின்னகானம்பட்டி, குளிக்காடு போன்ற கிராமங்களில் விவசாயிகள் பரவலாக குண்டுமல்லி செடிகளை அதிகம் வளர்த்து வருகின்றனர். குண்டுமல்லி பூக்கள் முகூர்த்த நாட்களில் விலை அதிகரித்து, கிலோ ₹2ஆயிரம் வரை விற்பனையாகிறது. முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் இல்லாத நேரங்களில் விலை வீழ்ச்சியடையும். இந்நிலையில், கடந்த சித்திரை, கத்திகை மாதங்களில் திருமணம் மற்றும் திருவிழாக்கள் நடைபெறாததால், குண்டுமல்லி பூ கிலோ ₹200க்கு கீழ் விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் திருமணம், திருவிழாக்களும் இப்போது ஆரம்பமாகியிருப்பதால் குண்டு மல்லிப் பூ விலை உயர்ந்து, கிலோ ₹700வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் 100 கிராம் ₹80க்கு விற்கின்றனர். அடுத்து வரும் ஆடி மாதத்தில் பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post குண்டு மல்லி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Gundu Malli ,Rayakottai ,gundamalli ,Kalankottai ,Dinakaran ,
× RELATED வியாபாரியை ஸ்குரூ டிரைவரால் தாக்கியவர் கைது