×

பெங்களூருவில் இருந்து கேரளா வந்த மதானிக்கு திடீர் உடல் நலக்குறைவு

திருவனந்தபுரம்: கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை பார்க்க மதானிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் மதானி கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான கொல்லம் அன்வார்சேரிக்கு காரில் வந்தார். கொச்சி இடப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனே அவரை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மதானியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும், இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post பெங்களூருவில் இருந்து கேரளா வந்த மதானிக்கு திடீர் உடல் நலக்குறைவு appeared first on Dinakaran.

Tags : Madani ,Kerala ,Bengaluru ,Thiruvananthapuram ,Kerala People's Democratic Party ,President ,Abdul Nasser Madani ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...