×

ஆதிபுருஷ் திரைப்பட விவகாரம் இந்துக்களை மட்டும் சோதிப்பது ஏன்: அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி

லக்னோ: சர்ச்சைக்குரிய “ஆதிபுருஷ்” திரைப்படத்தில் ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் ராஜேஷ் சிங் , ஸ்ரீ பிரகாஷ் சிங் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது படத்தின் தொடக்கத்தில் அது ராமாயணம் அல்ல என்ற மறுப்பு அறிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது,’ ராமர், தேவி சீதை, லக்ஷ்மணன், அனுமன், ராவணன், இலங்கை போன்றவற்றை காட்சிப்படுத்திவிட்டு, ​​ கதை ராமாயணத்திலிருந்து வந்ததல்ல என்பதை மக்கள் எவ்வாறு நம்புவார்கள். மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா? இந்துக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் ஏன் ஒவ்வொரு முறையும் சோதிக்கப்படுகிறார்கள்? இந்துக்கள் நாகரீகமாக இருக்கும்போது, ​​அவர்களை அடக்குவது சரியா?. தியேட்டர்களை மக்கள் தாக்காமல் இருந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். இதுபற்றி விளக்கமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஆதிபுருஷ் திரைப்பட விவகாரம் இந்துக்களை மட்டும் சோதிப்பது ஏன்: அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Allahabad High Court ,LUCKNOW ,Ramayana ,Dinakaran ,
× RELATED விரிஞ்சனோ? விடைவலானோ?