×

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1890 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை, ஜூன் 28: குமரி மாவட்டத்தில் மீன்பிடி பைபர் படகுகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் சிலர் மொத்தமாக வாங்கி, கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் இரவு ரோந்தில் ஈடுபட்டார். அப்போது நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் விரிவிளை வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் மினி டெம்போ வந்து உள்ளது. உடனே அதை சோதனைக்காக தடுத்து நிறுத்தினார்.

சுதாரித்துக் கொண்ட டிரைவர் டெம்போவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 கேன்களில் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் 1890 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ், மினி டெம்போ மற்றும் மண்ணெண்ணெயை நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் மண்ணெண்ணெய் மற்றும் மினி டெம்போவை, கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

The post நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1890 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nithravila ,Kerala ,Nithravilai ,Kumari district ,
× RELATED முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்...