×

கால்நடை மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை: உடுமலைப்பேட்டை மற்றும் தேனியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் நிருபர்களுக்கு தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் அளித்த பேட்டி: ஜூலை 3வது வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. கலந்தாய்வு ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்கும். இதில் சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டு மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவர்கள் ஆகியோருக்கு நேரடியாகவும், மற்ற படிப்புகளில் சேர உள்ளவர்களுக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடக்கும். அக்டோபர் மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். உடுமலைப்பேட்டை மற்றும் தேனியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் 80ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து பயிற்சி முறையில் 10 மாணவர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். நமது மாணவர்கள் 45 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பணியிடை பயிற்சிகளை பொறுத்தவரை அருகே உள்ள மாவட்டங்களுக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார்.

The post கால்நடை மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்டில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Udumalaipet ,Theni ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு...