×

ரூ.500தான் வாங்குவாராம்… டிரைவரிடம் மல்லுக்கட்டிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த புளியரை செக்போஸ்ட் வழியாக கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள், லோடு ஆட்டோக்கள் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. இந்த வாகனங்களில் கூடுதல் பாரம் ஏற்றியிருந்தால் செக்போஸ்ட்டில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது வழக்கம். கடந்த 26ம் தேதி இரவு 10 மணி அளவில் செங்கோட்டையிலிருந்து வைக்கோல் லோடு ஏற்றிய லாரி ஒன்று கேரளாவுக்கு சென்றது. புளியரை போலீஸ் செக்போஸ்ட்டில் லாரியை சோதனையிட்ட ஆய்க்குடி எஸ்எஸ்ஐ ஜேம்ஸ், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியிருப்பதால் வழக்கு பதிவு செய்யப் போவதாக டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து லாரி டிரைவர், ரூ.100 லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ ரூ.500 கேட்க டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து லாரியில் அதிக வைக்கோல் லோடு ஏற்றியதாக வழக்கு போடப் போவதாக எஸ்எஸ்ஐ ஜேம்ஸ் மிரட்டியுள்ளார். அப்போது அவருடன் மகாராஜன், காளிராஜன் ஆகிய போலீசாரும் பணியில் இருந்துள்ளனர். இந்த உரையாடலை எஸ்எஸ்ஐக்கு தெரியாமல், லாரி டிரைவர் செல்போனில் வீடியோ எடுத்து தென்காசி எஸ்பியின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய தென்காசி எஸ்பி சாம்சன், லஞ்சம் கேட்ட எஸ்எஸ்ஐ ஜேம்சை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். உடன் இருந்த காவலர்கள் மகாராஜன், காளிராஜன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

The post ரூ.500தான் வாங்குவாராம்… டிரைவரிடம் மல்லுக்கட்டிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SSI ,Kerala ,Puliarai ,Sengottai ,Tenkasi ,Dinakaran ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...