×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடையில் இரு பக்தர்கள் ஏறினார்கள் என்று தீட்சிதர்கள் தரப்பில் கூறியதால் காவல்துறையினருக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் கனக சபையில் அனுமதி இல்லை என்ற தீக்ஷதர்களின் அறிவிப்பு பலகை நேற்று அகற்றப்பட்ட நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்களை கனக சபையில் ஏற்றும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சார் ஆட்சியர் ஸ்வேதா சுமன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி, உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பக்தர்கள் கனகசபையில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பதற்றமான சூழல் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பக்தர் ஜெமினி ராதா என்பவர் கனக சபை படி மேல் அமர்ந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்குமாறு கோஷமிட்டார். அவருக்கு எதிராக அங்கு திடீரென திரண்ட பிஜேபி கட்சியினர் அவருக்கு எதிராக கோஷம் இட்டனர். திடீரென திரண்ட பிஜேபி கட்சியினருக்கும், காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கனகசபை மேடையில் இரு பக்தர்கள் ஏறினார்கள் என்று தீட்சிதர்கள் தரப்பில் கூறியதால் காவல்துறையினருக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடையில் இரு பக்தர்கள் ஏறினார்கள் என்று தீட்சிதர்கள் தரப்பில் கூறியதால் காவல்துறையினருக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Kanakasabhab ,Chidambaram Natarajar temple ,Ani Thirumanjana festival ,Cuddalore District ,Dithithas ,Kanakasabha ,Dinakaran ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...