×

டேஸ்ட்டி ரெசிபிகள்

2

சைவ ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 50 கிராம்
உளுந்து, முந்திரி, மக்காச்சோளம் – 50 கிராம்
முழு கோதுமை – 50 கிராம்
பச்சை மிளகாய் 2
பெரிய வெங்காயம் 1
கொத்தமல்லி,
மஞ்சள் தூள்,
மிளகுத்தூள்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்
தனியாக வறுத்து, கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்துக்கு நன்றாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை கரைத்த மாவுடன் கலந்து ஆம்லெட் போல் தோசைக்கல்லில் ஊற்றி, வேகவைத்து எடுத்தால் சுவையான ‘சைவ ஆம்லெட்’ தயார்.

ரோஸ்மெரி டீ

தேவையான பொருட்கள்

ரோஸ்மெரி நெட்டுகள் 4
டீ பாக்ஸ் – 2
சர்க்கரை மற்றும் பால் – தேவைக்கேற்ப.

செய்முறை

சுத்தம் செய்து அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் போட்டு ஒன்றரை கோப்பை கொதிநீர் ஊற்றி மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள் ஊற விடவும். இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் பொழுது, இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டு வரவும். இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக் கொள்ளவும். கிண்ணத்திலிருந்து டீ பாக்கை எடுத்து விட்டு பரிமாற போகும் டீ கோப்பையில் தேநீரை ஊற்றிக்கொள்ளவும். தேவைக்கேற்ப பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். சுவையான ரோஸ்மெரி டீ தயார்.

நெய்யப்பம்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 2
வெல்லம் – 100 கிராம்
அரிசி மாவு – 1 கப்
தேங்காய் – 1 துண்டு
சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
நெய் – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப.

செய்முறை

முதலில் இரண்டு வாழைப்பழத்தை அரைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அதில் வெல்லத்தை சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கரைத்த வெல்லத்தை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த வாழைப்பழம், கரைத்த வெல்லம், ஏலக்காய்த் தூள், அரிசிமாவு, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து கலக்கவும். தற்போது கலக்கிய மாவு சிறிது கடினமாக இருந்தால் சமையல் சோடா சேர்க்கவும். அடுத்து பணியார சட்டியை சூடேற்றி அதில் நெய் விட்டு மாவை ஊற்றவும். அப்பம் ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறமும் சிறிது நெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுடவும். சூடான மற்றும் இனிப்பான நெய்யப்பம் தயார்.

பாசிப்பருப்பு சொதி

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/4 கப்
முதல் தேங்காய் பால் – 1.1/2 கப்
இரண்டாம் தேங்காய் பால் 1.1/2 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 6 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூ ன்

தாளிக்க:-

பட்டை – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வெந்த பாசிப்பருப்புடன் இரண்டாவது தேங்காய்ப் பாலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து, கிளறி வேக வைக்கவும். வெங்காயம் நன்கு வெந்ததும் முதல் தேங்காய் பால் சேர்த்து பட்டை, கறிவேப்பிலையை தாளித்து கொட்டி இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான பாசிப்பருப்பு சொதி தயார்.

The post டேஸ்ட்டி ரெசிபிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதியில்...