×

டுகாட்டி பெனிங்ளே வி4 ஆர்

டுகாட்டி நிறுவனம், பெனிங்ளே வி4 ஆர் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மிக உயர்திறன் கொண்ட பைக்காக அறிமுகம் ஆகியுள்ள இதில், 988 சிசி 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 15,500 ஆர்பிஎம்-ல் 215 பிஎச்பி திறனையும், 12,000 ஆர்பிஎம்-ல் 111.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன. கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.69.99 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

The post டுகாட்டி பெனிங்ளே வி4 ஆர் appeared first on Dinakaran.

Tags : Ducati ,Indian ,Dinakaran ,
× RELATED தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்...