×

கீரை சாதம்

தேவையானவை

அரிசி 1 கப்
கீரை (ஏதாவது ஒரு வகை) 1 கட்டு
பெரிய வெங்காயம் தக்காளி – 1
பூண்டு பற்கள் 4
பச்சை மிளகாய் 2
சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர், பொடியாக நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்குங்கள். இதில் தண்ணீர் விடத் தேவையில்லை. கீரையின் நீர்ச்சத்தே போதுமானது. அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி விடவேண்டும். கீரை சுருண்டுவரும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி 3 நிமிடம் மூடிவைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான கீரைசாதம் தயார்.

The post கீரை சாதம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்