×

அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சைவம், அசைவம் அனைத்து வகை உணவிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளி கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கி கடந்த மாதம் வரை விளைச்சல் அதிகமாக இருந்ததால் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தக்காளியின் உற்பத்தியை பொருத்தே விலை ஏற்றம், இறக்கம் காணும் ஒரு நாள் அதிக விலையும் மற்றொரு நாள் குறைந்த விலைக்கும் விற்பனையாகும்.

கடந்த வாரம் கிலோ ரூ. 50 க்கு மட்டுமே விற்பனையாகிய தக்காளி நேற்று 100-ஐ தொட்டது. கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கோடை வெயிலின் தாக்கம், தொடர்ந்து வீசி வரும் பலத்தகாற்று என இயற்கை காரணங்களால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்தது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்ததால் இந்த விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வெளி சந்தையில் தக்காளி விலை உயர்ந்ததை அடுத்து பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ள 65 பசுமை பண்ணைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பசுமை பண்ணை காய்கறி அங்காடி,நடமாடும் காய்கறி அங்காடி மூலமாக கொள்முதல் விலைக்கே விற்க திட்டம். தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக கொள்முதல் விலைக்கே நுகர்வோர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பண்னை பசுமை கடைகளில் ஒருகிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னையில் 27 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படும். பண்னை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கோவை, திருச்சி, மதுரை. தூத்துக்குடி திருவண்ணாமலை உள்ளிட்ட 62 இடங்களில் செயல்படும் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

The post அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Government Farm Green Vegetable Stores ,Minister ,Periyakarappan ,Chennai ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...