×

சமூகநலகூடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்படுவதால் கண்ணகி நகர் குடியிருப்புக்கு அபாயம்: குடியிருப்புவாசிகள் கோரிக்கை

சென்னை: சமூகநலகூடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்படுவதால் கண்ணகி நகர் குடியிருப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் வானுயர வளர்ந்து நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டது கண்ணகி நகர். இந்த பகுதி இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்றப் பகுதியாகும். நுழைவு பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை, அருகிலேயே மருத்துவமனை, பெரிய பூங்கா என சகல வசதிகளுடன் கூடிய இந்த குடியிருப்பு உள்ளது.

கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் கண்ணகி நகரின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் மோசமான சம்பவங்கள் குறித்த நினைவுகள் தான் வந்து செல்லும். அந்த பள்ளம் அருகிலுள்ள குடியிருப்பின் பேஸ்மெண்ட் தெரியும் அளவுக்கு உள்ளதால், கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அங்கு வாழும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சுவர்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.25 கோடி செலவில் சமூகநலக்கூடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. சமூகநலகூடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்படுவதால் கண்ணகி நகர் குடியிருப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்படுவதால் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 36 குடியிருப்புகளில் வாழும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு நேரத்தில் குடியிருப்புகளில் தங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில், குழந்தைகள் விளையாடி வருவதால் எவ்வித பாதுகாப்பும் இன்றி உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். இதனிடையே குடியிருப்பு பகுதிகளை தாங்கி பிடிக்கும் தூண்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கட்டிடப்பணி மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கண்ணகி நகர் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சமூகநலகூடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்படுவதால் கண்ணகி நகர் குடியிருப்புக்கு அபாயம்: குடியிருப்புவாசிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kannagi Nagar ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வானகரத்தில் பழைய இரும்பு மற்றும்...