×

வேலை வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்; டிசிஎஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்..!!

சென்னை: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுக்க லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த நிறுவனத்தில் வேலை வழங்கும் பணியை மேற்கொள்ள புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு தற்காலிக வேலை வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக சமீபத்தில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்காலிக ஊழியர்களை பணியில் எடுக்கும் இந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழுவை சேர்ந்த சிலர் வேளைக்கு ஆட்களை வழங்கும் வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அந்த குழுவை சேர்ந்த 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதன் தலைவராக இருந்த சக்கரவர்த்தி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். தற்போது அந்த குழுவில் தலைவராக மனிதவள மேம்பாட்டு துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சிவகுமார் விஸ்வநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக 8 வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு டிசிஎஸ் தடை விதித்துள்ளது. கொரோனா காலத்தில் ஊழியர்கள் தேவை அதிகரித்தது. இதனால் ஐடி நிறுவனங்கள் தற்காலிக ஊழியர்களை நியமித்தன. இந்த காலகட்டத்தில் இருந்து தான் பணி வழங்கியதில் மோசடி தொடங்கியதாக தெரிகிறது. எனவே கடந்த 2, 3 ஆண்டுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களின் விவரங்கள், எந்த நிறுவனத்தின் மூலம் அவர்கள் வந்தார்கள் என்ற தகவலை டிசிஎஸ் ஆய்வு செய்து வருகிறது. இதேபோன்று மற்ற ஐடி நிறுவனங்களும் வேலை வாய்ப்பு வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதாக தெரிகிறது.

The post வேலை வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்; டிசிஎஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : TCS ,Chennai ,Dinakaran ,
× RELATED உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் நாடு...