×

திட்டக்குடி அருகே பரபரப்பு; காலில் கருங்கல் கட்டப்பட்டு கிணற்றில் சடலமாக கிடந்த வாலிபர்: கொலையா? போலீசார் விசாரணை

திட்டக்குடி: திட்டக்குடி அருகே காலில் கருங்கல் கட்டப்பட்டு கிணற்றில் சடலமாக கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் அருகே காந்திமதி என்பவருக்கு சொந்தமான விவசாய தரை கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் ராமநத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தகவலறிந்து திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டு வெளியே எடுத்தனர். விசாரணையில் இறந்தவர் ஆண் என்பதும், 40 வயது இருக்கும் என்பதும், கை, கால்கள் கட்டப்பட்டும், காலில் கருங்கல் கட்டப்பட்டும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து உயிருடன் இருந்த போது கல்லை காலில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தார்களா? அல்லது தேசிய நெடுஞ்சாலை ஓரம் என்பதால் வேறு எங்காவது கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திட்டக்குடி அருகே பரபரப்பு; காலில் கருங்கல் கட்டப்பட்டு கிணற்றில் சடலமாக கிடந்த வாலிபர்: கொலையா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bustle ,Phetakkudi ,Thitakudi ,Ramanantham, Cuddalore district ,Thitakudy ,Dinakaran ,
× RELATED திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி