×

குந்தலாடி சிவன் காலனியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து நடைபாதை பாதிப்பு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பந்தலூர், ஜூன் 27: பந்தலூர் அருகே குந்தலாடி சிவன் காலனிக்கு செல்லும் நடைபாதை ஓரத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி சிவன் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் நடைபாதையில் தடுப்புசுவர் இடிந்து விழுந்தும், குடியிருப்பு அருகே நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டும், மின்கம்பம் அருகே மண்சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடைபாதையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றி நடைபாதையை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மழைகாலம் துவங்கியுள்ளதால் நடைபாதை முழுதும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டும். எனவே நெலாக்கோட்டை ஊராட்சியினர் சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post குந்தலாடி சிவன் காலனியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து நடைபாதை பாதிப்பு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kundaladi Sivan Colony ,Bandalur ,Dinakaran ,
× RELATED தொடர் மழை எதிரொலி வணிக வளாகத்தில் மழைநீர் புகுந்தது