×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரிகள், கிரசர்கள் வேலைநிறுத்த போராட்டம்: கட்டுமான தொழில் பாதிக்கும் அபாயம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் செயல்படும் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. தமிழக அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கும் விதிமுறைகளை, சிறிய அளவிலான கல்குவாரிகள் நடத்துபவர்களுக்கும் விதிக்கப்படுவதாகவும் கூறி தமிழக கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் செயல்படும் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டது. அனைத்து கல்குவாரிகளும், கிரஷர்களும் மூடப்பட்டதால் தேனி மாவட்டத்தில் ரூ.3 கோடிக்கு மேலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளதால் பெரியகுளம் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்த படியாக நடைபெறும் கட்டுமான தொழிலும் அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது, தமிழக அளவில் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள், கிரஷர்கள் உரிமையாளர்கள் பங்கேற்று உள்ளனர். அனைத்து கல்குவாரிகள் கிரஷர்கள் மூடப்பட்டதால் தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் தினமும் 3 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.

தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக நடைபெறும் கட்டுமான தொழிலும் அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கல்குவாரிகளை நம்பி பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரிகள், கிரசர்கள் வேலைநிறுத்த போராட்டம்: கட்டுமான தொழில் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Theni district ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...