×

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ரூ32 லட்சம் உண்டியல் காணிக்கை

திருப்பதி: திருப்பதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 5 வாரங்களாக உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில், ரூ32 லட்சம் பணம், 46 கிராம் தங்கம், வெள்ளி 131 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இதில், கோயில் செயல் அலுவலர் முனி கிருஷ்ணா, அறங்காவலர் குழு தலைவர் கோபி, உறுப்பினர்கள், பணியாளர்கள், தன்னார்வ சேவா குடும்பத்தினர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ரூ32 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Kengayamman Temple ,Tirupati ,Ikhoil ,Kenkayamman Temple ,
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...