×

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு: 2வது நாளாக தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை!!

சென்னை:கோயம்பேடு சந்தையில் தக்காளி 2வது நாளாக கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. மழையால் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் எனக்கூறும் வியாபாரிகள் ஒரு வாரத்திற்கு விலை குறைய வாய்ப்பில்லை என தெரிவித்தனர். அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக தக்காளி இருந்து வருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது ரூ. 100க்கு விற்பனை ஆகிறது.

தொடர்ந்து 2வது தக்காளி ஒரு கிலோ ரூ. 100க்கு விற்கப்படுவதால் சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.தக்காளி மொத்த விற்பனையில் ரூ.90க்கும் சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 750 முதல் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை வியாபாரிகளே தக்காளியை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். தக்காளி மட்டுமின்றி கோடை மழையால் அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் மொத்த விற்பனையில் ரூ.110க்கும் சில்லறை விற்பனையில் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.80, அவரைக்காய் கிலோ ரூ.70, பச்சை மிளகாய் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு: 2வது நாளாக தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Coimbade Market ,Chennai ,Coimbed ,Coimbedu ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...