×

அச்சுறுத்தும் வேகத்தில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகள் விபத்து அபாயத்தில் பொதுமக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராவல் குவாரிகள் உள்ளன. கிராவல் மண்களை அள்ள பயன்படுத்தப்படும் இந்த லாரிகள் அனைத்தும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள டிப்பர் லாரிகள் ஆகும். இதனால் கிராவல் லோடு இருந்தாலும், காலி லாரியாக இருந்தாலும் அதிவேகமாக செல்கின்றனர். சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் தற்போது இருவழி மற்றும் நான்கு வழிச்சாலையாக உள்ளன. இதனால் அதிவேகத்திலேயே லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதிக எண்ணிக்கையிலான டிப்பர் லாரிகள் தொடர்ச்சியாக அதிவேகத்தில் செல்லுதல் திடீரென பிரேக் அடித்தல், முன்பு செல்லும் வாகனங்களை முந்துதல், கிராஸ் செய்தல் போன்றவற்றின் போது விபத்து ஏற்படுகிறது. மேலும் லோடு எண்ணிக்கையில் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதால் அதி வேகத்தில் டிரைவர்கள் லாரியை ஓட்டுகின்றனர்.

நகரங்களுக்குள் டூவீலர் உள்ளிட்ட அதிக வாகனங்கள் செல்லுமிடம், மக்கள் அதிகம் நடமாடும் இடத்திலும் லாரிகள் அதி வேகத்திலேய செல்வதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அசச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. இவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது,காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் கூட்டமாக செல்லும் போது கூட லாரியை மெதுவாக ஓட்டுவதில்லை. லாரி டிரைவர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் வேகத்தை குறைக்கவில்லை. நகர் பகுதிக்குள் செல்லும்போது குறைவான வேகத்தில் செல்லாமல் அதிவேகத்திலேயே செல்வதால் தொடர்ந்து அச்சத்துடன் நடமாடி வருகிறோம். கிராவல் லாரிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post அச்சுறுத்தும் வேகத்தில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகள் விபத்து அபாயத்தில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்