×

தொழிலாளியை கொன்ற பெண்ணிடம் விசாரணை

காவேரிப்பட்டணம், ஜூன் 27: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் லெனின்(40). கூலி தொழிலாளியான இவர், வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, ஊர் சுற்றி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரது மனைவி காவேரி(50). கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வரும் இவர், அருகில் உள்ள தோட்டத்திற்கு விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் மாலை, குடிபோதையில் இருந்த லெனின், காவேரியின் வீடு புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த காவேரி, அங்கிருந்த கட்டில் காலால், லெனின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் காவேரி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று 2வது நாளாக, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஊர் சுற்றி வந்த லெனின், மது குடித்து விட்டு பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. கணவனை இழந்து தனியாக வசித்து வந்த காவேரிக்கும், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமானதால், மனம் வெறுத்துப்போன காவேரி, பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவேரியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post தொழிலாளியை கொன்ற பெண்ணிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Lenin ,Perumal ,Kathiripuram ,Kaveripatnam, Krishnagiri district ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்