×

வைப்பூர் ஊராட்சி நிதியை முறையின்றி கையாளும் அதிமுக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்

காஞ்சிபுரம், ஜூன் 27: குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி நிதியை முறையின்றி கையாளப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வார்டு உறுப்பினர்கள் 4 பேர், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் வைப்பூர் ஊராட்சியில் 6 உறுப்பினர்களில், 4 உறுப்பினர்களான ரவிச்சந்திரன், சம்பூர்ணம், சல்சா, வெண்ணிலா ஆகியோர் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: ஊராட்சி மன்ற கூட்டங்களில் வரவு செலவுகளை வாசிப்பதில்லை. விவரங்கள் கேட்டாலும் மறுக்கின்றனர். ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பகுதிகளில் வேலைகள் செய்தால் வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது கிடையாது. ஊராட்சி மன்ற கூட்டங்களில் ஊராட்சி மன்ற செயலாளர் தீர்மானங்களை எழுதி வைத்துவிட்டு ஏகமானதாக நிறைவேற்றப்படுகிறது. மேலும், ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் தனிநபர் ஒருவரை சேர்த்துக்கொண்டு ஊராட்சி நிதியை முறையின்றி கையாளுகின்றனர்.

இந்த ஊராட்சி நிர்வாகத்தை அந்த தனிநபர் கைவசம் படுத்திக்கொண்டு நிர்வாகம் செய்கிறார். இதனை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் பெரும்பான்மையாக உள்ள 4 வார்டு உறுப்பினர்களை பற்றி எந்த அறிவிப்புகளும், முறையான அழைப்பை கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். ஆகவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சி நிர்வாகத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post வைப்பூர் ஊராட்சி நிதியை முறையின்றி கையாளும் அதிமுக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vaipur ,Kanchipuram ,Kunradthur panchayat ,AIADMK panchayat ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...