×

கந்தர்வகோட்டை கொத்தகம் சாலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை கொத்தகம் சாலையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள கொத்தகம் செல்லும் சாலையில் ஐயப்பன் கோவில் எதிர்புறம் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது. சிமென்ட் பூச்சிகள் உதிர்ந்த நிலையிலும் உள்கம்பி தூருபிடித்த நிலையில் உள்ளது. ஆடி மாதம் பிறக்க உள்ளதால் இயற்கை காற்று கூடுதலாக இருக்கும் அப்பொழுது பழுதடைந்த மின் மரம் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்த வழியே தினசரி அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ஆயிரக்கணக்கான மாணவிகளும், பல ஆசிரியர்களும், ஏராளமான பொதுமக்களும் சென்று வரும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பம் அருகில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (தெற்கு), வட்டார வள மைய அலுவலகம், வங்கார ஓடைகுளம் என மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இடம் ஆகும். எனவே மின்சார வாரியம் பழுதான மின்மரத்தை மாற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், இந்த வழியை பயன்படுத்துவோரும் சம்பந்தபட்ட துறையை கேட்டுக்கொள்கிறார்கள்.

The post கந்தர்வகோட்டை கொத்தகம் சாலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Gandharvakota Kothakam road ,GANDHARVAKOTTAI ,Kandharvakot Kothakam Road ,Kandarvakottai, Pudukottai district ,Kandarvakottai Kothakam road ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...