×

இமாச்சலில் கனமழை, நிலச்சரிவு 20 மணிநேரம் சிக்கித்தவிக்கும் சுற்றுலா பயணிகள்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் மழையால் சாலைகளில் வௌ்ளம் புகுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்து செல்கின்றன. மணாலி- சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் மண்டி- பண்டோ-குலு இடையேயான சாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் நேற்றுமுன்தினம் முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 20 மணிநேரம் சுற்றுலா பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். கட்டோலோ வழியே செல்லும் மண்டி- குலு இடையேயான சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் கிடந்த கற்கள் மற்றும் மண் அகற்றப்பட்டு இலகு ரக வாகனங்களுக்கான போக்குவரத்து மட்டும் தற்போது துவங்கியுள்ளது.மழையின் காரணமாக 301 சாலைகள் மூடப்பட்டுள்ளது.நேற்று மீண்டும் மழை பெய்ய துவங்கியதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post இமாச்சலில் கனமழை, நிலச்சரிவு 20 மணிநேரம் சிக்கித்தவிக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Himachal ,Shimla ,Himachal Pradesh ,Imachal ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...