×

ஆக்கிரமிப்பு அகற்றம் சரமாரி கல் வீச்சு இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேர் காயம்

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே எஸ்.மேலப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தீபா. இவரது வீட்டின் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம், தகர கொட்டகை மற்றும் சில கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. அருகிலுள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது ஒரு தரப்பினர் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஆயுதப்படை போலீஸ் சரவணன் உட்பட 7 போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் 4 பேர், பொதுமக்கள் 5 பேர் என 16 பேர் காயமடைந்தனர். போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post ஆக்கிரமிப்பு அகற்றம் சரமாரி கல் வீச்சு இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Deepa ,president ,Melapatti panchayat ,Madurai district ,
× RELATED நெல்லை அருகே பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்