×

ஏசின்னா சில்லுன்னு காத்து வரும்… இதுல மழை பெய்யுது… ரயிலில் மழை வசதியுடன் புதிய சூட் கோச் அறிமுகம்: கிண்டலடித்த மக்கள்

மேற்கு ரயில்வே சார்பில் மும்பை-இந்தூர் இடையே அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் உள்ள 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையில் ரயிலின் மேற்கூரை வழியாக ஏசி பெட்டிக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், அங்கிருந்த பயணிகள் தூங்க முடியாமல் உட்கார்ந்தே பயணித்தனர். இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பலரும் ஷேர் செய்து ரயில்வேயை கிண்டலடித்து வருகின்றனர்.

‘ரயில்வேயின் இந்த நிலைமைக்கு யார் காரணம். வெற்று பிரசாரத்துக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து இருந்தனர். ‘இந்திய ரயில்வே திறந்த மழை வசதியுடன் புதிய சூட் கோச்சை அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று ஒரு ட்விட்டர் பயனர் கிண்டலாக பதிவிட்டு இருந்தார். கடும் விமர்சனம் எழுந்த நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு, ‘இந்தப் பிரச்னை உடனடியாகக் கவனிக்கப்பட்டது. அவந்திகா எக்ஸ்பிரஸின் அனைத்துப் பெட்டிகளும் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. ரயில் திரும்பவும் பயணத்தைத் தொடங்கிவிட்டது, இப்போது அதுபோன்ற சிக்கல்கள் எதுவும் இல்லை’ என்று மேற்கு ரயில்வே விளக்கமளித்தது.

The post ஏசின்னா சில்லுன்னு காத்து வரும்… இதுல மழை பெய்யுது… ரயிலில் மழை வசதியுடன் புதிய சூட் கோச் அறிமுகம்: கிண்டலடித்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Esinna ,Avantika Express ,Western Railway ,Mumbai ,Indore ,Aesinna ,Dinakaran ,
× RELATED இரட்டை ரயில் பாதை அமைக்க ₹100 கோடி ஒதுக்கீடு