×

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்… ஆன்லைன் லோனில் மாட்டிக்காதீங்க என் ஜட்டிய வேற உருவிட்டான்: வேர்க்க விறுவிறுக்க லாரி டிரைவர் பாட்டு

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே கக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஏ.ஆர்.சுமன், லாரி டிரைவர். அவ்வப்போது பாடல்கள் பாடி வெளியிட்டு அதன் வாயிலாக சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார். அவர் குமரி மாவட்டத்தில் ஊர்களின் பெயர்களை வைத்து பாடல் பாடியிருந்தார். மேலும் பாடல்கள் பாடியும், வசனங்கள் பேசியும், குறும்படங்கள் வெளியிட்டும் சினிமா கனவில் வலம் வருகிறார். தற்போது ‘ஆன்லைன் லோனில் மாட்டிக்காதீங்க’ என்ற பெயரில் வீடியோ ஒன்றை பாடலாக பாடி வெளியிட்டுள்ளார். ஆன்லைனில் லோன் எடுத்து தனது அனுபவத்தை கூறுவது போன்று வசனம் பேசியும், பாடல் பாடியும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதில் அவர், ‘வட்டி எவ்வளவு போட்டாலும் கட்டலாம்னு தைரியம் உள்ளவங்க ஆன்லைனில் லோன் எடுங்க, அன்றாடம் கூலி வேலை செஞ்சு குடும்பம் நடத்துறவங்க தயவு செஞ்சு ஆன்லைனில் லோன் எடுக்காதீங்க, அனுபவத்தில் சொல்றேன், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று கூறிவிட்டு பாடல் ஒன்றை பாடுகிறார், ‘ஆன்லைனில் நான் லோன் எடுத்தேன், அதிக வட்டிய நான் குடுத்தேன், கேட்டதும் லோன குடுக்குறான்யா, என் குரல்வளைய இப்ப நசுக்குறான்யா. அட ஆன்லைன் லோனில் ஓஓஓஓ, வட்டி ரொம்ப அதிகம், ஏஏஏஏ. வட்டி என்ற பெயரில் என் ஜட்டிய வேற உருவிட்டான், ஆன்லைன் லோனில் மாட்டிக்காதீங்க. அட ஆமாங்க! என்று வேர்க்க விறுவிறுக்க அவர் பாடிய பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்… ஆன்லைன் லோனில் மாட்டிக்காதீங்க என் ஜட்டிய வேற உருவிட்டான்: வேர்க்க விறுவிறுக்க லாரி டிரைவர் பாட்டு appeared first on Dinakaran.

Tags : A.R.Suman ,Kakodu ,Tingalchandi ,Kumari district ,Dinakaran ,
× RELATED குமரி போக்குவரத்து ஊழியர் கொலையில்...