
- யூனியன் ஊராட்சி
- OPS
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- முன்னாள் முதல்வர்
- ஓ. பன்னீர்செல்வம்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நேரத்திற்கு ஏற்ற கட்டணம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் ஆகியவை குறித்து மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இது 2024 ஏப்ரல் 1 முதல் தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நடைமுறைக்கு வரும் என்றும், விவசாயம் தவிர இதர நுகர்வோர்களுக்கு 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருத்தங்கள் விலைவாசி உயர்விற்கு வழி வகுக்கும்.
ஒன்றிய அரசின் விதியால், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இன்னும் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை என்பதால் நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார-நுகர்வோர் விதிமுறைகளில் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு தேவையான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கொடுத்து திருத்தங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ஒன்றிய அரசின் மின் விதிமுறை திருத்தத்தை திரும்ப பெற அழுத்தம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.