×

மேட்டுப்பாளையத்தில் உடலில் காயங்களுடன் திரியும் பாகுபலி யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது: கோவை வனக்கோட்ட மருத்துவர்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உடலில் காயங்களுடன் திரியும் பாகுபலி யானை வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறது; நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என கோவை வனக்கோட்ட மருத்துவர் கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் சுற்றிவைத்த பாகுபலி யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு அந்த யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. வாயில் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர்.

பாகுபலி யானையை பிடிக்க நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் இருந்து வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகள் மேட்டுபாளையத்திற்கு அழைத்து வரப்பட்டன. யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயாராக உள்ள நிலையில் யானையை பிடிக்கும் பணியில் வேட்டைத்தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகுபலி யானை நிலை குறித்து கோவை வனக்கோட்ட மருத்துவர் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்; “மேட்டுப்பாளையத்தில் உடலில் காயங்களுடன் திரியும் பாகுபலி யானை வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறது, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது,

காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, பாகுபலி யானை வழக்கமான வேகத்தில் நகர்ந்து வருகிறது” என அவர் கூறினார்.

The post மேட்டுப்பாளையத்தில் உடலில் காயங்களுடன் திரியும் பாகுபலி யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது: கோவை வனக்கோட்ட மருத்துவர் appeared first on Dinakaran.

Tags : Bhagubali ,Madtupalaya ,Govai Vandakota Doctor ,Govai ,Bhagubaly ,Mattupalaya ,Goa Wild ,Doctor ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...